கோவையில் முதல் முறையாக கிரையோதெரபி எனும் சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது!!

   -MMH 

     கோவையில் முதல் முறையாக மூட்டு வலி, முதுகு வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளுக்கு கிரையோதெரபி எனும் சிகிச்சை மையத்தை கோலிவுட் நடிகை ஷிவானி நாராயணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

சென்னையில் செயல்ப்பட்டு வந்த கிரையோகினேசிஸ் வெல்நெஸ் ஸ்டுடியோ தற்போது கோவை சாய்பாபா காலனி ஸ்ரீராம் லே அவுட் பகுதியில் துவங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தினை, திரைப்பட நடிகை ஷிவானி நாராயணன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். 

தொடர்ந்து மையத்தின் நிறுவனர் ஜோ,  மற்றும் கோவை மையத்தின் கிளை உரிமையாளர் சிவா ஆகியோர் கூறுகையில்

இந்த மையத்தில் டாக்டர்களின் பரிந்துரைகளின் பெயரில் கிரையோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்படும். இங்கு முழு உடல் கிரையோதெரபி சிகிச்சை, கிரியோ பேசியல், டார்கெட் டெட் கிரையோதெரபி ஆகிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மூட்டு வலி, முதுகு வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளுக்கு இந்த சிகிச்சை முறை மிகவும் சிறந்தது.மென்மையான திசு சேதம் காரணமாக தசை வலிகள், பிடிப்புகள், சுளுக்கு மற்றும் வீக்கம் சிகிச்சை,தொழில்முறை, விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்களின் விரைவான மீட்பு,360 டிகிரி அழகு சிகிச்சைகள் என இன்று வரை 2ஆயிரம் சிகிச்சைகளை செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த சிகிச்சைக்கு 3 நிமிடங்கள் மட்டுமே ஆகும் எனவும் இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறலாம் என தெரிவித்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments