நெல்லையில் தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்..!!

    -MMH 

    SDTU நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் தொழிற்சங்க மாவட்ட அலுவலகத்தில் வைத்து சிட்டி மீட்டர் ஆட்டோ தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆரிஃப் பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கல்வத், மாவட்ட செயலாளர் செய்யது, மாவட்ட பொருளாளர் சுல்தான்பாஷா, பாளை தொகுதி ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்திக், நெல்லை தொகுதி ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரசூல் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் புதுமனைசிந்தா, காஜா மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார் அவர்கள் சிட்டி மீட்டர் ஆட்டோ வின் பலன்கள் தொடர்பான செய்திகளை எடுத்துக் கூறினார். நிகழ்வில் SDTU ஆட்டோசங்க கிளைநிர்வாகிகள், உறுப்பினர்கள், கலந்து கொண்டனர் கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சுல்தான் பாஷா நன்றி கூறினார்.

நாளைய வரலாறு  செய்தியாளர்.

-அன்சாரி நெல்லை.

Comments