நாடு முழுவதும் இன்று முதல் முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!!

 

   -MMH 

    ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க, பயன்படுத்த, விற்பனை செய்ய, இன்று முதல் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதன்படி, பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கோப்பைகள், பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் ஸ்பூன், பிளாஸ்டிக் அட்டைகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி, வினியோகம், விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. இன்று முதல் இந்தப் பொருட்கள் உற்பத்தி, இறக்குமதி, வினியோகம், விற்பனை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுஉள்ள நிறுவனங்களுக்கான உரிமங்களை ரத்து செய்யும்படி, அனைத்து மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.மாற்று தொழில் அல்லது தடையில்லாத பொருட்கள்தயாரிப்புக்கு மாற விரும்பினால், அதற்கேற்ப உரிமத்தில் மாற்றம் செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'பேக்கிங்' செய்ய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று அனைத்து 'இ - காமர்ஸ்' எனப்படும் இணைய வர்த்தக நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments