தக்காளி விலை கடும் வீழ்ச்சி விவசாயிகள் வேதனை!!

 

    -MMH 

     கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து. கிலோ ரூ.5-க்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது.

கடந்த சில வாரத்திற்கு முன்பு கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு ஏலம் போனது.

தற்போது தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் வெளியூரில் இருந்து கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளிகளை கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் நேற்று நடைபெற்ற ஏலத்தில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. ஏல ஆரம்பத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.8-க்கு ஏலம் போனது. இதனால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால், கிராம பகுதிகளில் இருந்து தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் பராமரிப்பு செலவு, தொழிலாளர்களுக்கு போன்றவற்றுக்கு கூட கட்டுப்படி ஆகவில்லை. இதன் காரணமாக நஷ்டம் அடைந்ததாக தங்கள் கவலையை தெரிவித்தனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments