சிறப்பு சலுகையுடன் கூடிய நகை வாங்கும் திட்டங்களை அறிவித்த தனிஷ்க் ஜூவல்லரி..!

   -MMH 

   கோவை: வாடிக்கையாளர்கள் சுலபமாக நகைகளை வாங்கும் வகையில் சிறப்பு தள்ளுபடியுடன் கூடிய நகை வாங்கும் திட்டங்களை தனிஷ்க் ஜூவல்லரி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி நகை விற்பனை நிறுவனமாக தனிஷ்க் ஜூவல்லரி உள்ளது. உலகம் முழுவதும் 393 விற்பனையகங்களை கொண்டுள்ள இந்த நிறுவனம் தமிழகத்தில் தான் முதல் முறையாக தனது நிறுவனத்தை தொடங்கியது.நமது கலாச்சாரத்தோடு ஒன்றிய நகைகளை திருமணம் போன்ற சுபகாரியங்களின் போது வாங்குவதற்கு மக்கள் சிரமப்பட்டு வரும் இந்த சூழலில், வாடிக்கையாளர்கள் நகை வாங்குவதை சுலபமாக்கா தனிஷ்க் ஜூவல்லரி சிறப்பு  திட்டங்களை அறிவித்துள்ளது.இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கோவையில் இன்று நடைபெற்றது. அப்போது டைட்டன் கம்பெனி லிமிடெட் நகைப் பிரிவின் சில்லறை விற்பனை நடவடிக்கை மேலாளர் திவ்ஜ்யோத் கவுர் பேசுகையில், கூறியதாவது:இந்திய கலாச்சாரத்தில் தங்க நகைகளை வாங்குவதும்  அலங்கரிப்பதும், முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அனைத்து பெற்றோர்களும் தங்கள் மகளுக்கு சிறந்தவற்றையே தர விரும்புகிறார்கள். மகளின் திருமணத்திற்கு அவர்கள் கொடுக்கும் சிறப்பு நகைகளை தனித்துவமாக வடிவமைத்துக் கொடுக்கிறது தனிஷ்க் ஜூவல்லரி.இதனிடையே  வாடிக்கையாளர்கள் சுலபமாக நகை வாங்குவதற்கு ரிவா ஆஷிர்வாத்- Sovereign Saver  என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்தத் திட்டத்தின் மூலம், மணப்பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறந்த தனிஷ்க் டிசைன்களுடன், நல்ல விலையில் தூய்மைக்கான உத்தரவாதத்துடன் தங்கள் திருமண நகையை உருவாக்க சிறந்த வாய்ப்பை வழங்கும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். 

மாதந்தோறும் மக்கள் சேமிக்கும் பணத்தை கொண்டு நகைகளை சுலபமாக வாங்கலாம்.  நகை வாங்குவதற்கான சேமிப்பு திட்டம் தொடங்கும் போதே, பல்வேறு வகையான திட்டங்களை நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். தனிஷ்க் ஜூவல்லரி எலைட் மக்களுக்கானது மட்டும் என்ற எண்ணம் உள்ளது. எங்கள் நிறுவனம் அனைத்து தரப்பு மக்களுக்குமானது. தேர்ந்தெடுத்த டிசைன்கள் எங்களிடம் உள்ளது. 8 முதல் 26 சதவீதம் செய்கூலியில் தனிஷ்க் ஜூவல்லரியில்  நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த திட்டங்களை பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக 18 சதவீதம் வரை செய்கூலியிலிருந்து தள்ளுபடி பெற முடியும் என தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக

- சீனி,போத்தனூர்.

Comments