மருத்துவம் சார்ந்த ரேடியோலஜி துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு!! சொசைட்டி ஆப் கூட்டமைப்பினர் தெரிவிப்பு!!

 -MMH 

மருத்துவம் சார்ந்த ரேடியோலஜி துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக சொசைட்டி ஆப் இந்தியன் ரேடியோகிராபர் அண்ட் டெக்னாலஜி கூட்டமைப்பினர் கோவையில் தெரிவித்துள்ளனர்…

கோவை குரும்ப்பாளையம் ஆதித்யா கல்வி குழுமம் மற்றும் சொசைட்டி ஆப் இந்தியன் ரேடியோகிராபர் அண்ட் டெக்னாலஜி இணைந்து தேசிய அளவிலான கருத்தரங்கம் வரும் 16,17 தேதிகளில் ஆதித்யா கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி அரங்கில் நடைபெற்றது. 

இதில் ஆதித்யா ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் டீன் தீபா பிரபாகர் மற்றும் சொசைட்டி ஆப் இந்தியன் ரேடியோகிராபர் அண்ட் டெக்னாலஜி தலைவர் வீரன் குட்டி மற்றும் நிர்வாகிகள் பார்த்திபன்,தேவராஜ்,ஜெரால்டு,சிக்கந்தர் பாவா ஆகியோர் பேசினர்.ஜூலை 16,17 ஆகிய இரண்டு நாட்கள்  Artificial Intelligence in Medical Imaging Opportunities, மற்றும் Applications And Possibilities ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற உள்ளதாகவும், இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 40 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்தும் சுமார் எண்ணூற்றுக்கும் அதிக மாணவ,மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

தற்போது புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு  சிகிச்சைகளில் நோயின் தீவிரம் குறித்து தெரிந்து கொள்ள ரேடியோலஜி துறை முக்கிய பங்கு வசிப்பதால், இந்த துறையில் தற்போது வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள கருத்தரங்கில் டெல்லி எய்ம்ஸ் மற்றும்   தமிழகத்தின் முன்னனி மருத்துவமனைகளை சேர்ந்த வல்லுனர்கள், மருத்துவர்கள்,டெக்னீசின்கள் உட்பட துறை சார்ந்த பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

- சீனி,போத்தனூர்.

Comments