பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!

   -MMH 

   முந்தைய காலத்தில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் சீருடை அணிந்து முடியை அழகாக சீவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.

காலங்கள் மாற மாற காலத்துக்கேற்ப நம் மக்களும் மாறி வருகின்றனர். இந்த சூழலில் மாணவ மாணவிகளும் தங்கள் சீருடைகளின் அளவு மாற்றுவதாக நினைத்து சீர்கேடான சீருடை அணிந்து வருகின்றனர். மேலும் அதிக நீளமான முடியை விட்டும் முடிக்கு டை அடித்தும் வருகின்றனர்.

ஆகையால் தற்போது கல்வித்துறை புதிய கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. அதன்படி முடி சீர்திருத்தம் செய்து வர வேண்டும்,கையில் கயிறு கட்டக் கூடாது மற்றும் பிறந்த நாளாக இருந்தாலும் பள்ளிக்கு பள்ளி சீருடை அணிந்து தான் வரவேண்டும் என்று புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக 

-பாஷா.

Comments