கோவை கிணத்துக்கடவில் இன்று வாக்கு எண்ணிக்கை!!

 

     -MMH 

    கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் காலியான பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகள்  இன்று எண்ணப்படுகிறது.

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர், குருநல்லிபாளையம் 4-வது வார்டு, சொக்கனூர் ஊராட்சி 1-வது வார்டு, நல்லட்டிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் ஆகிய இடங்கள் காலியானது. காலியாக உள்ள பதவி இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நல்லட்டிபாளையம், சொக்கனூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் வார்டு உறுப்பினர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நெ.10 முத்தூர் ஊராட்சி தலைவர் மற்றும் குருநல்லிபாளையம் வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டு இந்தநிலையில்  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments