கோவை சாய்பாபா காலனியில் டிரிக்கர் ஜீன்ஸ் புதிய ஷோரும் துவக்கம்!!

   -MMH 

       கோவை: கேஜி டெனிம் நிறுவனத்தின் பெயர்பெற்ற டிரிக்கர் ஜீன்ஸ், கோவையில் தனது புதிய ஷோருமை துவக்கியுள்ளது. தனித்தன்மை கொண்ட இந்த டிரிக்கர் பிராண்ட், சர்வதேச உணர்வுடன் கோவை இளைஞர்களின் கம்பீரத்தை எடுத்துக் காட்டும்; நகரின் மனப்பாங்கினை உயர்த்திக் காட்டும். இக்கால இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு உடைகளையும், வாழ்வியல் வடிவமைப்பு தயாரிப்புகளையும் வெளிக்காட்டும் விதமாக தொடர்ந்து வருகிறது. எந்த வடிவ அலமாரியானாலும், அதை அலங்கரிக்கும் வகையில், வெட்டி, ஒட்டி வடிவமைக்கப்பட்ட, சலவையிலும் சளைக்காத இந்த ஜீன் துணிகள் உத்வேகம் தரும். இதுகுறித்து டிரிக்கர் அப்பேரல்ஸ் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி திரு. என். ராஜகோபால், கூறும்போது :- ஆண்களின் ஆடைகளில், உயர்தரத்திலும், நியாயமான விலையிலும் டெனிம் துணி வகைகளில் நவீனத் தன்மையும் கொண்ட முன்னணி பிராண்ட் டிரிக்கர். இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளராக உருவாக முயன்று வருகிறது. இந்த பிராண்ட், கேஜி டெனிம் நிறுவனத்தின் துணை நிறுவனம். வசதியான, சொகுசான ஜீன்ஸ் உற்பத்தியிலும், வாடிக்கையாளர் விரும்பம் உயர் தர ஆயத்த ஆடை மற்றும் சேவையிலும் சிறந்து விளங்குவதையே இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது," என்றார்.டெனிம் வகையிலும், நவீன வடிவமைப்பிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், முதல் அனுபவமாக சில்லறை விற்பனையில் இறங்கியுள்ளது. கோவையில் இதன் தனித்துவமிக்க ஷோரூமை இன்று கோவை சாய்பாபா காலனி 7வது கிராஸில் துவக்கியுள்ளது. இதை கோவை கே.ஜி. குழுமங்களின் தலைவர் திரு. கே. ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கிவைத்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

- சீனி,போத்தனூர்.

Comments