தெருநாய்களை கட்டுபடுத்த தவறிய மாநகராட்சி நிர்வாகத்தை கன்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்!!

 -MMH 

கோவை மாவட்டத்தின் முக்கிய சாலைகளான , உக்கடம் உள்ளிட்ட  சாலைகளில், தெருநாய்களை கட்டுபடுத்த தவறிய மாநகராட்சி நிர்வாகத்தை கன்டித்து எஸ்டிபிஐ கட்சியினர், மாநகராட்சி அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தின் மத்திய பகுதிகளான உக்கடம், ஜிஎம் நகர், உள்ளிட்ட பகுதியில், தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இங்கு  உலாவும், நாய்கள் இந்த பகுதியில் உள்ள ஆடு, மாடு, போன்ற, கால்நடைகளை கடிப்பதுடன் பொதுமக்களையும் கடித்து வருகின்றது. இதனை கட்டுபடுத்த கோரி,  மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை வலியுறுத்தி, மாநகராட்சி நிர்வாகம், இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, நாய் தொல்லைகளை முற்றிலும் தடுக்க வேண்டும், என்று டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இன்று, நடைபெற்றது.  

இந்த  நிகழ்ச்சியின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்டிபிஐ கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் முகமது இசாக், கூறும் பொழுது, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து  வருகின்றது.

இதனை கட்டுப்படுத்த கோரி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எனவே இன்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார் இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தியவாறு, ஊர்வலமாக நடந்து வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவ்வாறு, முற்றுகையிட்ட அனைவரையும் காவல்துறையினர், கைது செய்து அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- சீனி,போத்தனூர்.

Comments