ஆடி அங்கீகரிக்கப்பட்ட ப்ளஸ் சென்டர் கோவையில் துவக்கம்!!

      -MMH 

ரீடெயில் வணிக விரிவாக்கத்தைத் தொடர்கிறது ஆடி இந்தியா...!ஆடி அங்கீகரிக்கப்பட்ட ப்ளஸ் சென்டர் கோவையில் துவக்கம்....! ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பாளரான ஆடி நிறுவனமானது கோயம்புத்தூரில் ப்ரீ - ஓண்டு சொகுசு கார் Facility சென்டரான ஆடி அப்ரூவ்டு;ப்ளஸ் (Audi Approved: plus) அதிநவீன ஷோரூமானது அவிநாசி சாலை, தொட்டிபாளையம் பிரிவில் திறக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழா குறித்து கருத்து தெரிவித்த ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான்,  “கோயம்புத்தூர் மற்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்த பிராந்தியத்தில் சொகுசு கார்கள் மற்றும் ப்ரீ-ஓண்ட் சொகுசு கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. புதிய கார் வாங்குபவர்களுக்கு சேவையாற்றும் விதமாக பிராந்தியத்தில் எங்களிடம் வலுவான இருப்பு உள்ளது.

அதோடு, நாங்கள் ஆடி அங்கீகரிக்கப்பட்ட: ப்ளஸ் Facilities தடத்தை வளர்த்து வருகிறோம். இதன்மூலம்,  நினைத்ததை விட முன்னதாகவே ஆடி பிராண்டிற்கு வாங்குபவர்களை வரவேற்க முடியும்.  தமிழ்நாட்டின் அழகிய சாலைகள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் எங்கள் நுகர்வோர்கள் இந்த கார்களை ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்றார். 

ஒவ்வொரு ப்ரீ-ஓண்ட்  வாகனமும் ஆடி அங்கீகரிக்கப்பட்ட: ப்ளஸ் ஷோரூம்களில் காட்சிப்படுத்தப்பட்டு விற்கப்படுகிறது.  கார் வாங்கும் போது வாடிக்கையாளர்களின் மன அமைதியை உறுதி செய்வதற்காக 300+ மல்டி-பாயின்ட் செக்கப் மற்றும் முழுமையான பல-நிலை தர சோதனைகள் மற்றும் முழுமையான ஆன்-ரோடு சோதனைகளில் இயந்திர, வெளிப்புற பாடி ஒர்க், உட்புறம் மற்றும் மின்சார சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.  ஆடி அங்கீகரிக்கப்பட்ட: பிளஸ் திட்டத்தின் கீழ், ஆடி இந்தியா ஆனது 24x7 சாலையோர உதவி மற்றும் யூஸ்டு கார் வாங்குவதற்கு முழுமையான வாகன ஹிஸ்டரியையும் வழங்குகிறது.கூடுதலாக, வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் எளிதான நிதி மற்றும் காப்பீட்டு நன்மைகளையும் பெறலாம். 

ஆடி கோயம்புத்தூர் ப்ரின்சிபல் டீலர்  ஆர்.ஆனந்தகிருஷ்ணன் கூறும்போது, “  இந்தியாவில் ஆடியுடன் நாங்கள் நீண்டகால கூட்டாண்மை கொண்டுள்ளோம். மேலும் கோயம்புத்தூரில் ஆடி அங்கீகரிக்கப்பட்ட புதிய மையமான ஆடி அப்ரூவ்டு; ப்ளஸ் சென்டரின் திறப்பு விழா நடைபெறுவதைக் காணும் போது பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.  ஆடி குடும்பத்திற்குள் வரும் புதியவர்களை வரவேற்பதற்கும், பயனுள்ள, நீண்ட கால உறவை ஏற்படுத்துவதற்கும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்றார்.

- சீனி,போத்தனூர்.

Comments