டெல்லியில் எம்.பியாக பதவியேற்கும் இசைஞானி இளையராஜா!! மலர் தூவி வரவேற்ற பாஜக!!

    -MMH 

மாநிலங்களவை உறுப்பினராக இசைஞானி இளையராஜா இன்று டெல்லியில் பதவியேற்றுக் கொள்கிறார். இதற்காக டெல்லி சென்ற இளையராஜவை பாஜகவினர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

பதவியேற்கும் இசைஞானி இளையராஜா:

உலகில் எட்டுத்திக்கும் ஒலிக்கும் இசை சாரலுக்கு சொந்த காரர் இசைஞானி இளையராஜா என்பது மிகையாகாது. சுமார் ஆயிரத்திற்கும் மேலான பாடல்களுக்கு இசையமைத்து இசை சக்கரவர்த்தியாக வலம் வந்தார். மேலும் இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக ராஜ்யசபா எம்.பி பதவி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு நியமன எம்.பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் அதில் இளையராஜா கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டது.

இசைஞானி இளையராஜா தன் சொந்த வேலைக்காக அமெரிக்க சென்றிருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய கையோடு டெல்லிக்கு விமானம் மூலம் நேற்று சென்றடைந்தார். அவரை பாஜக உறுப்பினர்கள் மலர் தூவி வரவேற்றனர். இதனை தொடர்ந்து இசைஞானி இளையராஜா இன்று நடைபெறவுள்ள மாநிலங்களவை கூட்டத்தின் போது நியமன எம்.பியாக பதவியேற்கவுள்ளார். இதனால் இளையராஜா ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

-சிவகுமார், சிந்தாதிரிப்பேட்டை.

Comments