300மில்லி தண்ணீரில் காரை சுத்தம் செய்து அசத்தும் நிறுவனம்!!

  -MMH 

கிளின்ட் இந்தியாவின் முதல் ஹைப்பர் லோக்கல் டோர்ஸ்டெப் கார் க்ளீனிங் சர்வீஸ் கோயம்புத்தூரில் தனது சேவைகளை அறிமுகப்படுத்துகிறது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்தியாவின் முதல் ஹைப்பர் லோக்கல் டோர்ஸ்டெப் கார் க்ளீனிங் சேவையான க்ளின்ட் நிறுவனத்தினர் தனது சேவைகளை இன்று, அறிமுகப்படுத்தியது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

கோவையை சேர்ந்த கார் உரிமையாளர்களின், கார்களை, அவர்களின் வீட்டு வாசலில் காரை சுத்தம் செய்தல், கார் விவரங்கள் மற்றும் பிற கார் பராமரிப்பு சேவைகளை தங்கள் வீட்டில் இருந்தபடியே பெரும் வசதியை கோவையில் அறிமுகபடுத்தினர்.

இது குறித்து க்ளின்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் விக்னேஷ் மகாதேவன்,மற்றும் வளர்ச்சித் தலைவர் வினூத் சுப்பிரமணியன் ஆகியோர் கூறும் போது, க்ளின்ட்  என்பது இந்தியாவின் முதல் ஹைப்பர்-லோக்கல் கார் கிளீனிங் ஸ்டார்ட்-அப் நிறுவனமாகும், இது சென்னையில் தொடங்கப்பட்டு தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதன் அடிப்படையில் கோவையில் இன்று துவங்கபட்டுள்ளது என்றார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பாரம்பரிய முறையில் ஒரு கார் கழுவ  வாளியில் தண்ணீரை கொண்டு, கழுவும் முறையை  பயன்படுத்தினால்,  7 முதல், 10 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்த தேவைப்படும் என்ற நிலையில் நமது நிறுவனத்தின் பணியாளர்கள் வெறும்  300 மில்லி தண்ணீரில் ஒரு காரை கழுவி சுத்தம் செய்து விடுவதாக தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஏராளமான மக்கள் தங்கள் வழக்கமான காரை சுத்தம் செய்வதற்கும், தங்களது  கார்களை பராமரிப்பதற்கும் சிரமப்படுவதை நாங்கள் கவனித்தும் தண்ணீரை சிக்கனபடுத்தவும். இந்த நிறுவனம் செயல்பட்டு வருகின்றது,கோவையில், அறிமுகம் செய்வது, உற்சாகமாக உள்ளது, என்றார்.

15 முதல், 20 நிமிடங்களில்  காரைச் சுத்தம் செய்வதாகவும், சென்னையில் 2,ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாதாந்திர சந்தாதாரர்களைக் கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம், கோவை யிலும்,  மாதாந்திர சந்தா முறையில், வாடிக்கையாளர்களின், வீடுகளுக்கே சென்று, அவர்களின், கார்களை  சுத்தம் செய்து தருவதாக கூறி யதை தொடர்ந்து காரின் செய்முறை விளக்கங்களையும் அளித்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments