ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில்7 6 சதுர அடி பரப்பளவில் 250 கிலோ சிறுதானிய கேக் கண்காட்சி!!

        -MMH 

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தினவிழாவைப் போற்றி பிரம்மாண்ட கேக் தயாரிக்கப்பட்டது. நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா, நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கிடையே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இதன்படி, கோவை நவ இந்தியாவில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், பி.எஸ்.சி உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை சார்பில், பிரம்மாண்ட சிறுதானிய கேக் கண்காட்சி இன்று  நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை முதன்மை இயக்க அலுவலர் சுவாதி ரோஹித் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.  

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழாவைப் போற்றும் வகையிலும், 76-வது சுதந்திர தினவிழாவை வரவேற்கும் வகையிலும், 76 சதுர அடி பரப்பளவில் 250 கிலோ கேக்கானது உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்டது. சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த கேக், அப்துல்கலாம் புக் ஆஃப் ரெக்கார்ஸ்சில் இடம் பெற்றுள்ளது. 

இதற்கான சான்றிதழை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை முதன்மை இயக்க அலுவலர்  சுவாதி ரோஹித், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர்  பி.எல்.சிவக்குமாரிடம்  வழங்கினார். முடிவில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதற்கான ஏற்பாடுகளை உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத்தலைவர்  எஸ்.தீனா, துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்வில் கோவையில் உள்ள பேக்கரி உரிமையாளர்கள், சமையல்கலை நிபுணர்கள் கலந்து கொண்டனர். 

அப்துல் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில், சிறுதானிய கேக் இடம் பெற்றதற்கான சான்றிதழை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை முதன்மை இயக்க அலுவலர்  சுவாதி ரோஹித், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர்  பி.எல்.சிவக்குமார்  வழங்கினார். அருகில் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத்தலைவர்  எஸ்.தீனா உள்ளிட்டோர்.

- சீனி,போத்தனூர்.

Comments