கோவை மாவட்ட செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுகம்!!

    -MMH 

    கோவை மாவட்ட செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் காந்திபுரம் சத்யநாராயண அரங்கில் நடைபெற்றது.

கோவை மாவட்ட செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள சத்தியநாராயண அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் மன்சூர் தலைமையில் நடைபெற்ற இதில்,மாவட்ட செயலாளர் சிவகுமார்,பொருளாளர் ரஃபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக  செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் சோமசுந்தரம் கலந்து கொண்டு சங்க உறுப்பினர்களிடையே கலந்துரையாடினார். முன்னதாக கோவை மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.இதில் புதிய மாவட்ட நிர்வாகிகளாக,ஷாஜகான்,பாரூக் ,அப்பாஸ்,ரகுராம்,தமீம் மஞ்சுநாத்,செந்தில்குமார்,கலிபத்துல்லா,சிராஜ்வெங்கட்,சிக்கந்தர்,உபைஸ்,இஜாஸ்,வசந்த்,பைசல்,உக்கடம் பகுதி நிர்வாகிகள்,முகம்மது காஜா,இப்ராஹிம் கார்த்திக் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், செல்போன் விற்பனையில் தற்போது உள்ள பல்வேறு பிரச்னைகள் மற்றும் செல்போன் விற்பனையாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் சோமசுந்தரம்,தற்போது மொபைல் போன் ஆன்லைன் வர்த்தகத்தால் பல்வேறு பாதிப்புகள் இருப்பதாகவும்,எனவே மொபைல் போன் ஆன்லைன் வர்த்தகத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சாலையோரங்களில் விற்பனை செய்து வரும் போலி சிம்கார்டுகள் மற்றும் தரமற்ற உதிரிபாகங்கள் விற்பனையை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். கூட்டத்தில் கோவை மாவட்ட செல்போன் விற்பனையாளர்கள் மற்றும் சர்வீஸ் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

- சீனி,போத்தனூர்.

Comments