விளாத்திகுளம் அருகே கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்!!

விளாத்திகுளம் அருகே கொட்டும் மழையில் கண்மாயில் இறங்கி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் கீழ வைப்பார் ஊராட்சி, ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தில் கண்மாய் உள்ளது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை சுற்றிலும் 150 மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இக்கண்மாய்க்கு வரும் நீர்வரத்து கால்வாய் அனைத்தையும் மாதவன் சால்ட் கம்பெனி என்ற நிறுவனம் ஆக்கிரமிப்பு  செய்துள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியரிடம் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கொட்டும் மழையில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று கண்மாயில் இறங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். கீழ வைப்பார் ஊராட்சி மன்ற தலைவர் ரோஸ்மலர், பலசுப்ரமணியம், காந்தி, முருகேசன், சோலையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

தகவல் அறிந்து விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மழைக்காலத்தில் விவசாயம் பதிக்கப்படும் அதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்டம் நிர்வாகம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments