கோவையில் இருந்து கோராக்பூர் சிறப்பு ரயில்!!

  

கோவை பண்டிகை காலத்தை முன்னிட்டு கோவையில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் கோராக்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கோவையில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் கோராக்பூருக்கு, வரும், 11 முதல் நவ., 8ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து(வ.எண்:05304) வாரந்தோறும் செவ்வாய் காலை,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

4:40 மணிக்கு புறப்படும் ரயிலானது வியாழன் காலை, 8:35க்கு கோராக்பூர் சென்றடையும்.திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, பெரம்பூர், நெல்லுார், ஓங்கல், விஜயவாடா, நாக்பூர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்கிறது. கோராக்பூரில் இருந்து(05303) வாரந்தோறும் சனிக்கிழமை காலை, 8:30க்கு புறப்படும் சிறப்பு ரயில், 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

திங்கள் காலை, 7:25க்கு கோவை வந்தடையும். வரும், 8 முதல், நவ., 5 வரை இயக்கப்படும் இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று, மூன்றாம் வகுப்பு ஏசி இரண்டு, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 10, முன்பதிவு இல்லாத பெட்டிகள் ஏழு, என, 22 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments