பாரம்பரிய பயிர் ரகங்களை பாதுக்க வேண்டும் விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்...

 

-MMH

தூத்துக்குடி  மாவட்டத்தில் அதிக ஊட்டச்சத்து இருப்பதால், பாரம்பரிய பயிர் ரகங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்ட உள்ளார். நேற்று நடைபெற்ற விவசாயகள் குறைதீர்க்கும்  கூட்டத்தில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி சார்பில் பனை மரத்தின் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள்.

அதை தொடரந்து இன்று தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் பாரம்பரிய ரகங்கள் சாகுபடி, விற்பனை வாய்ப்புகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த வேளாண் கண்காட்சி மற்றும் விவசாயிகள் மேளா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் தேரடிமணி தலைமை தாங்கினார். தூத்துக்குடி வேளாண் இணை இயக்குநர் பழனிவேலாயுதம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, கிள்ளிகுளம் வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து விவசாய வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்குகிறது. பனை மரங்கள் நிறைய பயன்தரக்கூடியவை. மேற்குவங்கம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து குட்டை வகை பனைமரங்கள் கொண்டு வரப்பட்டு கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த குட்டை வகை பனைமரங்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இங்கு நடைபெறும் கண்காட்சியில் மாப்பிள்ளை சம்பா, கவுணி அரிசி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அற்புதமான சக்தி கொண்ட பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை இந்த வகையான நெல் ரகங்களை பயிரிட வைக்க வேண்டும். நமது மாவட்டத்தில் 600 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் பாரம்பரிய நெல் விதைகள் நெல் பயிரிடும் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மூலமாக புதிதாக பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது நமது தூத்துக்குடி மாவட்டத்துக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமையும். நெல் மட்டுமல்லாமல் அனைத்து பயிர்களிலும் பாரம்பரிய ரகங்களை அழியாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இயற்கையாகவே பாரம்பரிய ரகங்களில் அதிக ஊட்டச்சத்து உள்ளது. மேலும் அதிக பூச்சிக்கொல்லி மருந்துகள், கூடுதலாக உரங்கள் தேவையில்லை. நமது சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றது. பாரம்பரிய ரகங்களை சந்தைப்படுத்தினால் அதிக அளவில் மக்கள் வாங்குவார்கள். எனவே விவசாயிகள் பாரம்பரிய ரகங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வல்லநாடு பகுதியில் நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த ஆண்டு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். அடுத்த ஆண்டு நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாளைய வரலாறு செய்திக்காக தூத்துக்குடி நிருபர்,

-வேல்முருகன்.

Comments