கோயமுத்தூர் ரோட்டரி சவுத் சங்கத்திற்கு மாவட்ட ஆளுநர் வருகை தரும் நிகழ்ச்சியில் பத்து இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!!

 -MMH

ரோட்டரி சங்கம் 3201 மாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் கோயமுத்தூர் சவுத் ரோட்டரி சங்கம் பல்வேறு சமூக நலப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் கோயமுத்தூர் ரோட்டரி சவுத் சங்கத்திற்கு மாவட்ட ஆளுநர் வருகை தரும் நிகழ்ச்சி புலிய குளம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாக உள் அரங்கில் நடைபெற்றது.

கோயமுத்தூர் ரோட்டரி சவுத் சங்கத்தின் தலைவர் நல்லதம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட இயக்குனர் மயில்சாமி,துணை ஆளுநர் சஞ்சய் ஷா,ஜி.ஜி.ஆர்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிறப்பு விருந்தினர் மாவட்ட ஆளுநர் ராஜ் மோகன் நாயர் வருகை புரிந்தார்.அவருக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவம்,கல்வி ஆகியவற்றிற்கு  நிதி உதவிகள் வழங்கப்பட்டது.இதில் இதயங்கள் அறக்கட்டளைக்கு ரூபாய் மூன்று இலட்சம் ரூபாய்க்கான காசோலையை அறக்கட்டளை நிறுவனரான மருத்துவர் சுவாமிநாதனிடம் வழங்கப்பட்டது.இதே போல மதுக்கரை அரசு மேல் நிலைபள்ளிக்கு கூரை அமைப்பதற்கு சுமார் ஐந்து இலட்சமும்,சின்ன நவக்கரை, சிக்கலாம்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மூன்று அரசு பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்தி்ரமும் வழங்கப்பட்டது.

மாவட்ட ஆளுநர் வருகை நிகழ்ச்சியில் சுமார் பத்து இலட்சம் அளவிலான நிதி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டதை மாவட்ட ஆளுநர் உட்பட நிர்வாகிகள் பலர் பாராட்டு தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் கோயமுத்தூர் ரோட்டரி சவுத் சங்கத்தின் செயலாளர் சிவஞான பிரகாஷ்,பொருளாளர் முத்துக்குமரன்,மற்றும் நன்கொடையாளர்கள் ரொட்டேரியன்ஸ் சாமிநாதன்,பழனிசாமி,பத்ரி,ராஜசேகரன்,தங்கராஜ் உட்பட நிர்வாகிகள்,உறுப்பினர்கள்  பலர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments