வால்பாறை மார்க்கெட் பகுதியில் சிதறி கிடக்கும் குப்பைகளால் நோய் தொற்று பரவும் அபாயம் !! பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகள்!!!

-MMH

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில்  அமைந்துள்ள மார்க்கெட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்கள் உள்ளிட்ட தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்லும் பகுதியாக உள்ளது .

பொதுமக்கள் கூடும் இந்த பகுதிகளில் சுத்தம் சுகாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது ? மார்க்கெட் பகுதியில் உள்ள கடைக்காரர்கள்  சாலைகளில் குப்பைகளை அங்கும் இங்கும் போட்டு குவித்து விடுகிறார்கள் வியாபாரிகள் அலட்சியத்தால் மார்க்கெட் பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது மற்றும் நோய்தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

 அப்பகுதியில் கால்நடைகள் குப்பை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது நகராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சி.ராஜேந்திரன்.

Comments