கோவையிலிருந்து புறப்படும் காஷ்மீர் சிறப்பு சுற்றுலா ஏசி ரயில்களை அறிமுகம்!!

  -MMH

     இந்திய ரயில்வே இந்த ஆண்டு புதிய கோடை கால சுற்றுலா பயணிகளுக்காக கோவையிலிருந்து புறப்படும் காஷ்மீர் சிறப்பு சுற்றுலா ஏசி ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியன்  ரயில்வே சுற்றுலாப் பயணிகளுக்காக தொடர்ந்து பல்வேறு வகையான  புதிய கோடைகால சிறப்பு ரயில்களையும் அறிமுகப் படுத்தியுள்ளது. இந்நிலையில் பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் சவுத் ஸ்டார் இரயில் எனும் புதிய காஷ்மீர் வரை செல்ல உள்ள சுற்றுலா இரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

வரும் மே 11 ந்தேதி காஷ்மீர் வரை செல்ல உள்ள இந்த சுற்றுலா இரயிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து சவுத் ஸ்டார் இரயில் திட்ட தலைவர் கில்பர்ட், டிராவல் டைம்ஸ் இயக்குனர் விக்னேஷ்,தென்னிந்திய இரயில்வே வர்த்தக ஆய்வாளர் சந்தீப் ராதா கிருஷ்ணா ஆகியோர்  செய்தியாளர்களிடம் பேசினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த கோடையில், சுற்றுலாப் பயணிகள் தங்கள் விடுமுறையை அனுபவிக்கும் வகையில் புதிய வழிகளை முயற்சித்து இந்த புதிய சுற்றுலா இரயிலை அறிமுகபடுத்தி இருப்பதாகவும்,வரும் மே 11 ந்தேதி கோடைகால சுற்றுலாவாக ஸ்ரீநகர் சேரன்மார்க் குல்மார்க் ஆக்ரா அமிர்தசரஸ் போன்ற சுற்றுலா தளங்களுக்கு 12 நாட்கள் சிறப்பு சுற்றுலாவாக இந்த ரயில் கோவையிலிருந்து புறப்படுவதாகவும்,இந்த ரயில்களில் முழுவதும் குளிரூட்டபட்ட மூன்று பிரிவுகளில் இரயில் பெட்டிகள் இருப்பதாகவும்,சுற்றுலா செல்பவர்களின் வசதி கருதி மூன்று பேக்கேஜூகள் இதில் இருப்பதாக தெரிவித்தனர். 

இந்த பேக்கேஜுகளுடன் சுற்றுலா பயணிகள் இரவு தங்குவதற்கு ஏசி மற்றும்  அல்லாத ஹோட்டல் தங்குமிடம், சுற்றிப்பார்ப்பதற்கு வாகன வசதிகள், ஆன்-போர்டு மற்றும் ஆஃப்-போர்டு சைவ உணவு வகைகள்,என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக கூறினர்.

முழுவதும் இரயில் பயணத்தை விரும்புவர்களுக்கு நல்லதொரு அனுபவத்தை தரும் வகையில் இந்த சுற்றுலா இரயில் செல்ல உள்ளதாகவும், சுற்றுலா பயணிகள் செல்லும் ஊர்களில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு  செல்லும் போது அன்றைக்கு தேவையான உடமைகளை மட்டும் எடுத்துச் சென்றால் போதும் மீதி உடமைகள் ரயிலிலேயே பாதுகாக்கப்படும் வசதி உள்ளதாக தெரிவித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments