மை கராத்தே இண்டர்நேஷனல் வீரர்,வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!!

  -MMH

மை கராத்தே இண்டர்நேஷனல் வீரர்,வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!!

  மாநில அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டியில் கலந்து கொண்டு கோவை திரும்பிய மை கராத்தே இண்டர்நேஷனல் வீரர்,வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு.

தமிழ்நாடு மாநில கராத்தே சாம்பியன்சிப் போட்டிகள் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. கேடட் மற்றும்  ஜூனியர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில்  கோவையிலிருந்து மை கராத்தே இண்டர்நேஷனல் மாணவ,மாணவிகள் சுமார் இருபது பேர் போட்டிகளில் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் கோவை திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு மை கராத்தே இண்டர்நேஷனல் நிறுவனர் தியாகு நாகராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் பேசிய அவர்;கராத்தே கலை சர்வதேச அளவில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவதாகவும், போட்டிகளில் வெற்றி பெற பயிற்சியாளர்கள் தரும் பயிற்சியை மாணவ,மாணவிகள் தினமும் கடுமையாக கடைபிடித்தால் மட்டுமே போட்டிகளில் வெற்றி பெற முடியும் எனவும், இதற்கு பெற்றோர்களின் ஆதரவும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விரைவில் ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகள் வர உள்ள நிலையில் போட்டிகளுக்கு மாணவ,மாணவிகள் தங்களை தயார் படுத்தி கொள்வது அவசியம்  என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் சிவமுருகன்,பரத் கிருஷ்ணன்,மதன்,அரவிந்த்,விது சங்கர், நந்தகுமார், தேவதர்ஷினி,ராஜ்குமார்  உட்பட மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments