மூணாறில் மலர் கண்காட்சி அலை மோதும் கூட்டம்!!

-MMH

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதியில் மலர்கண்காட்சி துவங்கி இரண்டு நாட்களை ஆன நிலையிலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் காட்சியை கண்டு களிக்கின்றனர்.

 மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மூணார் பகுதிகளிலும் அதிகமான மழை பெய்தாலும் கூட அங்கே வசிக்கும் மக்களும் சுற்றுலா பயணிகளும் மழையைக் கூட பொருட்படுத்தாமல் வந்து ரசித்து செல்கின்றனர்.

ஆயிரத்துக்கும் அதிகமான மலர்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன அங்கே சென்று பலவர்ண விளக்குகள் மலர்களோடு பொருத்தப்பட்டு இசை மற்றும் பாடல்கள் ஒரு பக்கம் கண்காட்சியை மெருகேற்ற கலர் கலரான அழகான பூக்கள் புன்னகையுடன் வரும் விருந்தினர்களை    வரவேற்ப்பது   ஒரு பக்கம் என  இயற்கை அழகையும் சேர்த்து கண்காட்சியும் மூன்றரை மிகவும் பொலிவு பெற செய்துள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments