புற்றுநோய் சிகிச்சைக்கு புதுமையான மருத்துவ சிகிச்சை..தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அறிமுகம்!!

  -MMH

புற்றுநோய் சிகிச்சைக்கு புதுமையான மருத்துவ சிகிச்சை..தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அறிமுகம்… 

  புற்றுநோய் மருத்துவத்தில் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அவ்வப்பொழுது அறிமுகமாகி வருகின்றன..அந்த வகையில் இஸ்ரேலிய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புதிய மருத்துவ உபகரணம் தென்னிந்திய அளவில் முதல் மருத்துவமனையாக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

ஐஸ் க்யூர் நிறுவனத்தின் புரோசென்ஸ் கிரையோ அப்லேஷன் சிஸ்டம் எனும் இந்த புதிய மருத்துவ கருவி அறிமுக விழா கே.எம்.சி.எச். மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நல்லா ஜி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. மருத்துவமனையின்செயல் இயக்குனர் டாக்டர் அருண் என். பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இதில்,  சிறப்பு விருந்தினராக இஸ்ரேல் நாட்டின்  தூதரக அதிகாரி, கான்சுலேட் ஜெனரல்  டாம்மி பென் ஹெய்ம் இந்த புதிய உபகரணத்தை அறிமுகம் செய்து வைத்தார். 

புதிய புற்றுநோய் சிகிச்சை கருவி குறித்து டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி கூறுகையில்,அல்ட்ரா சவுண்ட் அல்லது சிடி ஸ்கேன் வழிகாட்டுதலுடன் ஒரு ஊசியை புற்றுநோய் கட்டியின் மைத்தில் செலுத்தி திரவ நைட்ரஜன் கொண்டு புற்றுநோய் செல்களை உறைய வைத்து அவற்றை அழித்துவிட இக்கருவி உதவுகிறது. இந்த முறை மூலம் உலகம் முழுவதும் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் மற்றும் இதர உடல் பாகங்களில் ஏற்படும் புற்று நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக. மார்பக புற்றுநோயின் ஆரம்ப நிலையில் இம்முறை சிறந்த பலனளிக்கும் என அவர் தெரிவித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து பேசிய அவர், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் எந்த புதிய மருத்துவ தொழில் நுட்பத்திலும் முதலீடு செய்ய கே.எம்.சி.ஹெச். நிர்வாகம் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், முதன்மை புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் டாக்டர் சுப்பிரமணியம், புற்றுநோய் துறையின் டாக்டர் பரத் ரங்கராஜன், கதிரியக்க சிகிச்சை துறை தலைவர் டாக்டர் மேத்யூ செரியன், மார்பக புற்றுநோய் முதன்மை ஆலோசகர் டாக்டர் ரூபா ரங்கநாதன், மருத்துவர்கள்  வெங்கடேஷ் ஸ்ரீமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments