இந்தியாவில் உள்ள கல்லூரிகளுக்கான என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை பட்டியலில் கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 4 ஆம் இடம் பிடித்து சாதனை!!

-MMH

ஒவ்வொரு ஆண்டும், கல்வி, மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், கல்லூரியின் செயல்பாடுகளை கணக்கிட்டு தேசிய தரவரிசைப்பட்டியல் நிறுவனமான என்.ஐ.ஆர்.எஃப் (NIRF)/தர வரிசைப்பட்டியலை வெளியிட்டு வருகின்றது.

பொறியியல், கலை அறிவியல் என வெவ்வேறு பிரிவிகளின் கீழ தரவரிசைப்பட்டியலை  என்.ஐ.ஆர்.எஃப்.வெளியிடுகிறது. அதன்படி இந்தாண்டு  தரவரிசைப்பட்டியள் வெளியாகியுள்ளது. இதில் பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியலில்  சென்னை ஐஐடிக்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. 

கலை- அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் கோவையை சேர்ந்த கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தேசிய அளவில் 4ம் இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் கோவையை சேர்ந்த 9 கல்லூரிகள் முதல் 100 இடங்களில் இடம் பிடித்துள்ளது.இந்நிலையில்,கிருஷ்ணம்மாள் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் நந்தினி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,இந்திய அளவில் 2746 கலை அறிவியல் கல்லூரிகள் இடம் பெற்ற நிலையில் கிருஷ்ணம்மாள் கல்லூரி நான்காம் இடம் பிடித்துள்ளதாகவும், தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக தேசிய அளவில்  இந்த கல்லூரி நல்ல கட்டமைப்புடன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதாக கூறிய அவர், அடுத்தாண்டு இந்த தரவரிசை பட்டியலில் மேலும் முன்னேற்றம் அடைவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த இடத்தை அடைய உழைத்த பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாக அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது கல்லூரியின் செயலர் யசோதா,பேராசிரியர்கள் பாலசுப்ரமணியம்,ராஜ ராஜேஸ்வரி,சதாசிவம்  ஆகியோர் உடனிருந்தனர்.

தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த கிருஷ்ணம்மாள் கல்லூரிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் இந்த விருதை பெற கல்லூரி முதல்வர் மீனா டெல்லி சென்றுள்ளது குறிப்பிடதக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments