வேலூர் சரகத்தில் நடப்பாண்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 53 நபர்கள் குண்டர் சட்டத்தில் அடைப்பு !!!


வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகிலிருக்கும் ‘ஜான்ரஸ்’ என்ற ‘சாத்கர்’ மலைக்குள் வற்றாத நீரோடைகளும், சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான மூலப்பொருள்களுள் ஒன்றான குறிப்பிட்ட மரப்பட்டைகளும் அபரிமிதமாகக் காணப்படுகின்றன. இதனால், சட்டவிரோத மாஃபியா கும்பல்கள் சாத்கர் மலைப் பகுதியை ஆக்கிரமித்து, சாராய அடுப்புகளைப் பற்றவைத் திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் ரெய்டுக்குச் செல்லும் போலீஸார், பல்லாயிரம் லிட்டர் சாராய பேரல்களை அடித்து நொறுக்கிவிட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில், வேலூர் சரக காவல்துறையினர் மலைக்குள் அமைந்திருக்கும் டங்காபள்ளம், பன்னிக்குட்டிபள்ளம், நீர்முல், பால்சுனை, டோபிப் பாறை, கடம்பப் பாறை உள்ளிட்ட இடங்களில் ‘ட்ரோன்’ கேமராவையும் பறக்கவிட்டு சாராய அடுப்புகளையும், ஊறல் வடிக்கும் பேரல்களையும் கண்டுபிடித்து அழித்தனர். சுமார் பத்தாயிரம் லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான மூலப்பொருள்களுள் ஒன்றான குறிப்பிட்ட மரப்பட்டைகளையும் தீயிட்டு எரித்தனர்.  ‘‘இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும் டி.ஐ.ஜி முத்துசாமி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையில் வேலூர் சரகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள் இதுபோன்று தொடர்ச்சியாக குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் சரகத்தில் நடப்பாண்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 53 நபர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன். 

Comments