கோவையில் தெற்கு சுழற்சங்க 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!

கோவை தெற்கு சுழற்சங்கம் சார்பாக கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகை வழங்குவது, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மரங்கள் நடுவது என பல்வேறு சமூக நலப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை தெற்கு சுழற்சங்கத்தின் 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை அவினாசி சாலையில் உள்ள கிராண்ட் ரீஜெண்ட் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் புதிய தலைவராக ராஜசேகரன் பதவி ஏற்று கொண்டார். அவருக்கு முன்னாள் தலைவர்  நல்லதம்பி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பழ.கருப்பையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புதிய நிர்வாகிகள் செயலாளராக பொன்ராஜ் பொருளாளராக தங்கராஜ்  பல்வேறு சங்க நிர்வாகிகளும் பதவியேற்று கொண்டனர். தொடர்ந்து விழாவில், ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள மூன்று கறவை மாடுகள் இதயம் சேரிடபிள் அறக்கட்டளைக்கு கோ தானமாக வழங்கப்பட்டது. இதில் அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணன் சுவாமிநாதன் பெற்று கொண்டார். தொடர்ந்து கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவித்தொகை, விளையாட்டு ஊக்கத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுவாமிநாதன்  மாமரக்கன்றுகளை வழங்கினார்.

இவ்விழாவில் தெற்கு சுழற்சங்கத்தின் உறுப்பினர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் திரளாக கலந்து கொண்டனர். விழாவில், மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட இயக்குனர் கோகுல்ராஜ், துணை ஆளுநர் ரமேஷ், ஆளுநர் குழு பிரதிநிதி நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழாவில் இறுதியாக செயலாளர் பொன்ராஜ் நன்றியுரை வழங்கினார்.

-சீனி, போத்தனூர்.

Comments