ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் டி.ஐ.ஜி தலைமையில் காவல்துறையினர் சாராய வேட்டை! 2100 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கிராம மக்கள் உறுதிமொழி!!!

திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு  பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும் கடத்துபவர்களையும் விற்பனை செய்பவர்களையும் பிடிக்க வேலூர் சரக காவல்துறை டி.ஐ.ஜி  முத்துசாமி அவர்கள் மற்றும் எஸ்.பி.மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் கள்ளச்சாராய வேட்டை நடத்தி சுமார் 2,100 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அளித்தனர் மேலும் இது சம்பந்தமாக ஏழு பேரை கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் வேலூர் சரக டி.ஐ.ஜி  எம் .எஸ்.  முத்துசாமி அவர்கள் மற்றும் திருப்பத்தூர் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் தலைமையில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கள்ளச்சாராய ஒழிப்பு வேட்டையில்  ஈடுபட்டனர். இதில் வேலூர் சரக டிஐஜி அவர்களின் நேரடி மேற்பார்வையில் புதூர் நாடு மலை கிராமங்களான சேம்பரை மற்றும் மேல்பட்டு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் மேல்பட்டு மலை கிராம பொதுமக்களிடம் மதுவிலக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது . கூட்டத்தில் 250 க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் பங்கு கொண்டனர் பெண்கள் தங்கள் கணவர்கள் மற்றும் பிள்ளைகளை சாராய தொழிலில் ஈடுபடாமல் இருக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் நடந்த அதிரடி போதனையில் ஒரே நாளில் பத்து வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராயம் மற்றும் 35 லிட்டர் மது பாட்டில்களும் 2100 லிட்டர் சாராய ஊறல்களும்  பறிமுதல் செய்யப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments