பொன்னாருக்கு போட்டியாக வருகிறாரா தமிழிசை?

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 9 முறை போட்டியிட்டு, இருமுறை வென்றவர் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இம்முறையும் தனக்கே சீட் என உறுதியாக நம்பி தேர்தல் வேலைகளை துரிதப்படுத்தி வருகிறார் பொன்னார். 

தொடர்ச்சியாக இங்கே நிற்பவர் என்பதால் வழக்கமாக இந்தத் தொகுதியில் பொன்னாரை மீறி இன்னொருவரின் பெயரை பாஜகவினர் மறந்தும் உச்சரிக்க மாட்டார்கள். ஆனால், இம்முறை இன்னொரு பெயரையும் பொன்னாருக்கு மாற்றாக உச்சரிக்கிறார்கள். புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை தான் அந்த இரண்டாவது சாய்ஸ். கன்னியாகுமரி தமிழிசையின் சொந்த மாவட்டம். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவரை களமிறக்கினால் அவரது சித்தப்பா மகனும் சிட்டிங் காங்கிரஸ் எம்பி-யுமான விஜய் வசந்த் பக்கம் இருக்கும் உறவின் முறை வாக்குகளையும் தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்று கணக்குச் சொல்கிறார்கள் பாஜகவில் இருக்கும் தமிழிசை ஆதரவாளர்கள். அவர்களிடம், ஆளுநர் பதவி வரைக்கும் போய்விட்டவரை மீண்டும் அரசியல் களத்துக்கு கொண்டு வருவார்களா என்று கேட்டால், “வடக்கில், உபி முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மாதிரி அதற்கு நிறைய உதாரணம் இருக்கே” என்று கண்சிமிட்டுகிறார்கள்

நாளைய வரலாறு செய்திக்காக,

-எல் இந்திரா, நாகர்கோவில்.

Comments