ஏழை நாடுகளுக்கு இந்தியா தான் முதல் முதலாக கோவிட் தடுப்பூசிகளை அன்பளிப்பாக அனுப்பியது!! - ஜார்கண்ட் மாநில ஆளுநர் பேச்சு!!


ஏழை நாடுகளுக்கு இந்தியா தான் முதல் முதலாக கோவிட் தடுப்பூசிகளை அன்பளிப்பாக அனுப்பியது - ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு.

கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் ஜார்கண்ட் ஆளுநர்  சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுவிழா மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 2.11 கோடி நிதி வழங்கும் விழா, மருத்துவமனை அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் கே எம் சி எச் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் நல்லா.ஜி. பழனிசாமி தங்களது நிதியிலிருந்து 2.11 கோடி தொகையை பிரதமரின் நிவாரண நிதிக்கு ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் இடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து அண்ணாமலை மேடையில் வாழ்த்தி பேசும் பொழுது. கொங்கு வாசனை குறையாத அன்பு அண்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன், சிறந்த வேலை திறன் உடையவர். கட்சிகாக சொந்த சொத்துகளை விற்றவர் இவர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ்நாட்டின், கொங்கின் பெருமையை உயர்தியவர் சி.பி.ஆர்.ஆளுநரை கவுரவப்படுத்துவது எங்கள் ஒவ்வொருவரையும் கவுரவப்படுத்துவது போன்றது என பேசினார். இதையடுத்து பேசிய ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இரண்டு பேர்தான் எமனை வென்றவர்கள்.ஒன்று எம்.ஜி.ஆர் ,மற்றொருவர் கே.எம் சி எச் மருத்துவமனை நிறுவனர் நல்லா பழனிசாமி.தனது 35 வது வயதிலேயே ஐ.பி.எஸ் பணியை துறந்தவர் அண்ணாமலை. தமிழகத்தில் ஆளும் இயக்கத்திற்கு எதிராக ஓங்கி ஒழிக்கும் குரல் அண்ணாமலை.

இதை அரசியலுக்காக சொல்லவில்லை.கே எம் சி எச் சார்பில் கொடுக்கப்பட்ட
இரண்டு கோடி நிதியை அண்ணாமலை தனது லெட்டர்பேடில் பிரதமருக்கு அனுப்ப வேண்டும். கோவிட்டுக்கு மருந்து இல்லாத சூழலில் எண்ணற்ற ஏழை நாடுகளுக்கு முதல் முதலாக இந்தியாவிலிருந்து கோவிட் தடுப்பூசி அன்பளிப்பாக அனுப்பப்பட்டது.வெற்றியை பெறபோகிறவர் அண்ணாமலை.
வெற்றியையும், முழுப்பலனையும் தமிழகம் பார்க்க வேண்டும்.
அண்ணாமலை ஒரு நாள் தமிழகத்திற்கும் தலைவராக வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.' என பேசினார்.

-சீனி, போத்தனூர்.

Comments