உருளிகள் எஸ்டேட் மருத்துவமனை பகுதியில் கரடி நடமாட்டம்!! பொதுமக்கள் அச்சம்!!

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் யானை புலி சிறுத்தை மான்கள் வரையாடுகள் உள்ளிட்ட பல்வகை வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவை அவ்வப்போது மக்கள் வகிக்கும் பகுதிக்குள் புகுந்து வருகின்றன. இதனால் மனித வன விலங்குகள் மோதல் ஏற்பட்டு வருகிறது. சில சமயங்களில் மனித உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இந்த சூழ்நிலையில் வால்பாறை உருளிக்கள் எஸ்டேட் பகுதிக்கு உட்பட்ட உருளிக்கல் மருத்துவமனையில் இரவு நேரங்களில் கரடி உலா வருவதினால் நோயாளிகள் அவதியடைகின்றனர். 

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் அப்பகுதியில் கரடி நடமாட்டம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கரடியை பிடிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர், 

-சி.ராஜேந்திரன்.

Comments