வால்பாறையில் விழும் நிலையில் உள்ள மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!!

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது அவ்வப்போது பலத்த காற்றும் வீசி வருகிறது இதனால் சாலையின் ஓரங்களில் உள்ள மரங்கள் சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த சூழ்நிலையில் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வாட்டர் ஃபால்ஸ் நெடுஞ்சாலை ஓரத்தில் டீ கடை பின்புறம் ஆபத்தான நிலையில் வலுவிழந்து நிற்கும் இரண்டு சூடை மரங்களை அகற்ற வேண்டும் என வனத்துறை அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். 

மற்றும் வால்பாறையில் அதிக கன மழை பெய்வதால் சாலையில் விழும் நிலையில் வலுவிழந்து  காணப்படும் ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மீண்டும்  கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments