முதலாம் ஆண்டு மாணவ,மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!!

கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி.கலை அறிவியல் கல்லூரியில் சுஸ்வாகதம் எனும் முதலாம் ஆண்டு மாணவ,மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கலை அறிவியல் கல்லூரியில்  முதலாம் ஆண்டு மாணவ,மாணவிகளை வரவேற்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. சுஸ்வாகதம் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில் பி.பி.ஜி.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமை தாங்கி பேசினார்.கல்லூரி வாழ்க்கையை துவங்க உள்ள மாணவ,மாணவிகளுக்கு  கல்வி கற்பதன் அவசியத்தை கூறிய அவர்,வாழ்வில் எல்லா நிலையிலும் முன்னேற்றங்கள் அடைய கல்வி கற்பது மிக முக்கியம் எனவும்,நேர்மறையான எண்ணங்களை இளம் தலைமுறையினர் வளர்த்தி கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளிடையே பேசினார்..அப்போது பேசிய அவர்,பள்ளி பருவத்தில் இருந்து கல்லூரி வாழ்க்கையை துவங்க உள்ள மாணவ,மாணவிகள் தங்களது இலட்சியத்தை  இலக்காக வைத்து அதனை அடைய சரியான வழியை தேர்வு செய்தால், வெற்றி நிச்சயம் என பேசினார். தொடர்ந்து பேசிய அவர், சைபர் குற்றப்பிரிவில் தற்போது வரும் புகார்களில் அதிக புகார்கள் கல்லூரி மாணவ,மாணவிகள் தரப்பலிருந்து வருவதாக கூறிய அவர்,சமூக வலைதளங்களை கவனமுடன் கையாள வேண்டும் என அறிவுறுத்தினார்.  

நிகழ்ச்சியில் பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தாளாளர் சாந்தி தங்கவேலு, நிர்வாக அறங்காவலர் அக்சய் தங்கவேலு, கல்லூரியின் முதல்வர் முனைவர் முத்துமணி உட்பட மாணவ,மாணவியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments