'மக்னா' யானை நடமாட்டத்தால் நிம்மதியின்றி தவிக்கிறோம்!! ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம் முற்றுகை!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரியில், விவசாய நிலங்களை சேதப்படுத்திய, 'மக்னா' காட்டு யானையை, மயக்க ஊசி செலுத்தி ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் பகுதியில் வனத்துறையினர் விட்டனர். 

தோட்டங்கள் வழியாக கோவை மதுக்கரை வரை நடந்தே சென்ற மக்னாவை மறுபடியும் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, மானாம்பள்ளி வனச்சரம் மந்திரி மட்டம் பகுதியில் விட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மீண்டும் டாப்சிலிப் வழியாக வந்த யானை, பொள்ளாச்சி வனப்பகுதிக்குள் வலம் வருகிறது. தற்போது சரளப்பதியில், கடந்த ஐந்து மாதங்களாக மக்னா யானை விளை நிலங்களுக்குள் புகுந்து, மா, தென்னை மரங்களை சாப்பிட்டு வனத்துக்குள் செல்கிறது. இரு கும்கி யானைகளுடன் வனத்துறை கண்காணிப்பில் ஈடுபட்டாலும் பலன் இல்லை.

தொடர் சேதத்தால் விரக்தி அடைந்த விவசாயிகள், பழங்குடியின மக்கள், நேற்று ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments