ஆபத்தை உணராமல் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்!! விபரீதமாக ஏதாவது நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

-MMH

கோவை மாவட்டம் வால்பாறை இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மிகச்சிறந்த சுற்றுலா தளமாகும் இங்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து இயற்கை அழகை கண்டு ரசித்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விதித்துள்ள கட்டுப்பாடுகளை  மீறி செயல்படுகின்றனர்.

நீர் நிலைகளில் இறங்கி குளிக்க கூடாது என்ற தடைகளையும் மீறி குளிப்பது வாகனங்களை நிறுத்தி வன விலங்குகளுடன் செல்ஃபி எடுக்க முயல்வது தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைவது போன்று தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினர் எவ்வளவு எச்சரிக்கை விடுத்தாலும் அதை மீறும் சிலர் இருக்கத்தான் செய்கிறார் சமீபத்தில் கூட ஆசனூர் பகுதியில் காட்டு யானையுடன் செல்போன் எடுக்க முயன்ற நபர்களுக்கு வனத்துறை 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது செய்தித்தாள்களில் வந்தது நினைவு இருக்கலாம்.

தற்பாது வால்பாறையில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டு உள்ளது. வால்பாறை அருகே உள்ள கூலங்கள் ஆற்று பகுதியில்  தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால், சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் தண்ணீரில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர். 

காவல் துறையினரும் வனத்துறையினரும் எவ்வளவுதான் அறிவுரை எச்சரிக்கை செய்தாலும் சுற்றுலா பயணிகளில் சிலர் அதை கேட்பதாக இல்லை வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிதாக செல்லும் இடங்களின்  தன்மையை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவே அந்த இடத்தைப் பற்றி அறிந்தவர்கள் கூறும் அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகளை மதித்து நடக்க வேண்டும்.

வால்பாறை காவல்துறையினர்  அப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தண்ணீரில் இறங்குவதற்கு தடை செய்யவும் தொடர்ந்து கண்காணிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி. ராஜேந்திரன்.

Comments