ஓட்டப்பிடாரம் அருகே முப்புலிவெட்டி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்!!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே  முப்புலிவெட்டி கிராமத்தில் ஏற்கனவே இருந்த சமுதாய நலக்கூடம் கட்டிடமானது பழுதாகி மிகுந்த மோசமான நிலையில் இருந்ததால் கடந்த 2019 ஆம் ஆண்டு  திருமண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு பழைய பள்ளி கட்டிடம் அருகில் உள்ள காலி இடத்தில் பூமி பூஜை செய்துள்ளனர். கடந்த சில வருடங்களாக கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் திருமண மண்டப பணிகள் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது.

மேலும் தற்போது மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தாட்கோ நிதி உதவியுடன் 2 கோடி செலவில் 13  சென்ட் நிலத்தில் அமைப்பதற்காக முதற்கட்ட  பணிகள் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திருமண மண்டபம் அமைப்பதற்காக ஊர் பொதுமக்கள் பூமி பூஜை செய்த இடத்தில்,  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியின் சமையலறை கட்டிடம்  கட்டும் பணி நடந்து வந்துள்ளது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE...

பள்ளி அருகே சமையலறை கட்டிடம் கட்டுவதற்கு போதுமான இடம் இருப்பதாகவும் எனவே திருமணம் மண்டபத்திற்கு பூமி பூஜை செய்த இடத்தில் மீண்டும் திருமண மண்டபம் அமைக்க வேண்டும் எனவும், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் சமுதாய நல கூடம் கட்ட வலியுறுத்தியும் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சாலை முப்பிலிவெட்டி பேருந்து நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட  39க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து ஓட்டப்பிடாரம் அருகே  சேவை மைய கட்டிடத்தில்  தங்க வைத்தனர். மேலும் காவல்துணை கண்காணிப்பாளர்கள் சம்பத், வெங்கடேசன் தலைமையில் குமார் 60க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments