சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம்! லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற, நூற்றாண்டுகள் பழமையான சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோவிலில் வைகாசித் திருவிழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த ஜூன் 1ஆம் தேதி இக்கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றதால் வைகாசி திருவிழா, ஆனி மாதத்தில் நடைபெறுகிறது. ஜூன் 25ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


நேற்று வெகு விமர்சையாக தேரோட்டம் நடந்தது. இதையொட்டி நேற்று சிறிய தேர்களில் தனித்தனியாக விநாயகர், பிடாரி அம்மனும், பெரிய தேரில் சேவுகப்பெருமாள் அய்யனார், பூரணை - புஷ்கலை தேவியருடன் எழுந்தருளினர். தொடர்ந்து மாலை 4.20 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்த தேர், ஐதீக முறைப்படி களிமண்ணால் செய்யப்பட்ட கழுவன், கழுவச்சி உருவங்கள் மீது ஏறி, அவர்களை வதம் செய்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

Watch video on youtube

தொடர்ந்து மாலை 5.10 மணிக்கு கோயில் நிலையை அடைந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த தேர்த்திருவிழாவில் குழந்தை வரம், நோய்களுக்கு நிவாரணம், விவசாயம் செழிக்க வேண்டுதல் போன்ற நேர்த்திக்கடன்களுக்காக லட்சக்கணக்கான தேங்காய்கள் தேரடிப் படிகளில் வீசியெறிந்து உடைக்கப்பட்டன. பல மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த நிகழ்ச்சியில் 5 லட்சத்துக்கும் அதிகமான தேங்காய்கள் உடைக்கப்பட்டன. இந்த தேர்த்திருவிழாவில் மத பேதமின்றி கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களும் பங்கேற்றனர்.

மேலும் இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழாவை காண வந்திருந்தனர். இன்று இரவு நடைபெற உள்ள பூப்பல்லக்கு நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெற உள்ளது.

-பாரூக், ராயல் ஹமீது.

Comments