ஆகாஷ் பைஜுவின் 2023 ஆம் ஆண்டுக்கான ஆகாஷ் நேஷனல் டேலன்ட் ஹண்ட் எக்ஸாம்!!

ஆகாஷ் பைஜுவின் 2023 ஆம் ஆண்டுக்கான ஆகாஷ் நேஷனல் டேலன்ட் ஹண்ட் எக்ஸாம் எனும் ஆந்தே தேர்வுகள் வரும் அக்டோபர் மாதம் துவக்கம். இதில் ஏழாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை கலந்து கொள்ளலாம் என ஆகாஷ் நிர்வாகம் அறிவிப்பு.

ஆகாஷ் இன்ஸ்டிடியூட்டின் தேசிய அளவிலான ஸ்காலர்ஷிப் தேர்வான  ஆகாஷ் நேஷனல் டேலன்ட் ஹண்ட் எக்ஸாம் எனும் ஆந்தே திறன் தேர்வுகள்   ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்  இரு வழிமுறைகளில் வரும்   அக்டோபர் 7 ந்தேதி துவங்கி -15 ந்தேதி வரை நடைபெற உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அவினாசி சாலையில் உள்ள ஆகாஷ் பைஜு மையத்தில் நடைபெற்றது..இதில், ஆகாஷ் பைஜூஸ் துணை இயக்குனர் குடே சஞ்சய் காந்தி மற்றும்  உதவி இயக்குனர் ஸ்ரீனிவாச ரெட்டி, வர்த்தக தலைவர் ராம்கி, பி.ஆர் தலைவர் வருண் சோனி, கிளை மேளாலர்கள் கோபிநாத், செந்தில்குமார் ஆகியோர் பேசினர்.

ஏழாம் வகுப்பு முதல் பனிரெண்டாம்  வகுப்பு தேர்ச்சி பெற்ற  மாணவ மாணவிகளுக்காக 14 வது பதிப்பாக  நடைபெறும் இதில்  100 சதவீதம்  வரை ஸ்காலர்ஷிப்கள் வழங்கப்படும். ரொக்கப்பரிசுகள் 700 மாணவர்களுக்கு தரப்படும் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு தேசிய அறிவியல் சாகசப் பயணத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் கடந்த ஆண்டு 16  இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதிய நிலையில் இந்த வருடம் 18  இலட்சத்திற்கும் அதிகம் பேர் இதில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த தேர்வுகளில் கலந்து கொள்வதால் தேசிய தேர்வுகளான  நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளை எளிதில் எதிர் கொள்ள முடியும் என தெரிவித்தனர். இதற்கு சான்றாக பல மாணவர்கள் தேசிய அளவிலான தேர்வுகளில் சாதித்துள்ளதாக தெரிவித்தனர். மாணவ,மாணவிகளின்  சிறந்த  எதிர்காலத்திற்கு பயன்படும் வகையிலான இந்த தேர்வுகளை  சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments