கிரடாய் அமைப்பின் சார்பில் ஃபேர்புரோ 2023 வீடு மற்றும் வீட்டுமனை கண்காட்சி!!

-MMH

கிரடாய் அமைப்பின் சார்பில் ஃபேர்புரோ 2023 வீடு மற்றும் வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை.கோவை கொடிசியாவில் ஆகஸ்ட் 11 – 13 வரை நடைபெறுகின்றது.

எப்போதும் இல்லாத அளவிற்கு முதல் முறையாக ஃபேர்புரோ தருகிறது ஏராளமான சலுகைகள் . கோவை கிரடாய் அமைப்பின் சார்பில் ஃபேர்புரோ 2023 வீடு மற்றும் வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை 2023 ஆகஸ்ட் 11 முதல் 13 வரை கோவை கொடிசியா வளாகத்தில் E-ஹாலில் நடைபெறுகின்றது.  

இதுகுறித்து :- கிரடாய் கோவை அமைப்பின் தலைவர் திரு. குகன் இளங்கோ, ஒருங்கிணைப்பாளர் திரு. முகமது ஷபி செயலாளர் திரு. எஸ்.ஆர். அரவிந்த்குமார் ஆகியோர் கூறியதாவது :- எப்போதும் இல்லாத அளவிற்கு முதல் முறையாக ஃபேர்புரோ ஏராளமான சலுகைகளை இந்த முறை தருகின்றது. அனைத்து முன்னணி கட்டுமானத்தினரையும் ஒருங்கிணைத்து, சிறப்பான சலுகைகளுடன் வீடு வாங்கும் விற்பனையை கிரடாய் நடத்துகிறது.

 இந்த சலுகை விற்பனை 3 நாட்களுக்கு மட்டுமே. ஃபேர்புரோ கண்காட்சியில், வீடுகள், தனி வீடுகள், அடுக்குமாடி வீடுகள் மற்றும் மனை வாங்க முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சலுகைகளை கிரடாய் உறுப்பினர்கள் மற்றும் முன்னனி வங்கிகள் அளிக்க முன்வந்துள்ளனர். இவர்களுக்கு மிக்க நன்றி.

வீடு மற்றும் வீட்டுமனை வாங்க விருப்பம் உள்ள உங்கள் நண்பரை ஃபேர்புரோவில் அறிமுகம் செய்து பரவசமூட்டும் போனஸ் பெறுங்கள். நீங்கள் உங்கள் நண்பருக்கு கனவு இல்லத்தை வாங்க ஃபேர்புரோ அறிமுகம் செய்தால், என்ன கிடைக்கும் என்பதை யூகியுங்கள் பார்க்கலாம்? இந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு வெற்றிகரமான அறிமுகத்திற்கும் ரொக்க பரிசாக சுமார் 25,000 ரூபாயை ஊக்கத்தொகையாக நீங்கள் பெறலாம்.

நண்பர் அறிமுக திட்டத்தை எளிமையாக்கும் விதமாக இது டிஜிட்டல் முறையில் க்யூஆர் கோடுகளை பதிவு செய்து, வாட்ஸ் ஆப் போன்றவைகளில் தொடரலாம். எளிதான, வெளிப்படையான பரிவர்த்தனைக்கு இது உதவும்.உங்களது காலண்டரில் ஃபேர்புரோ தேதிகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த அருமையான வாய்ப்பை தவறவிடாமல், உங்கள் நண்பர்களுக்கு நல்ல வீடு அமைய உதவி செய்வதோடு,பரிசுகளையும் அள்ளுங்கள்.

இந்த வீடு வாங்கும் திருவிழாவிற்கு பாரத ஸ்டேட் வங்கி கண்காட்சிக்கான டைட்டில் ஸ்பான்சராக தனது ஆதரவை வழங்கியுள்ளது. மேலும் கோல்டன் ஸ்பான்சராக கனரா வங்கி தனது ஆதரவை வழங்கியுள்ளது.கண்காட்சி விபரம் :-

நடைபெறும் நாட்கள்:  2023 ஆகஸ்ட் 11, 12, 13.

இடம்: கொடிசியா ஹால் இ

துவக்க விழா: ஆகஸ்ட் 11, மதியம் 12.05 மணி.

சிறப்பு விருந்தினர்: ஊரக மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் மண்புமிகு முத்துசாமி அவர்கள்.

ஃபேர்புரோ 2023 வீடு மற்றும் வீட்டுமனை கண்காட்சியின் சிறப்புகள் :-

25 முக்கிய டெவலப்பர்கள் பங்கேற்பு

75-க்கும் மேற்பட்ட திட்டங்கள்

6 முன்னணி வங்கிகள் பங்கேற்பு

வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்பு, பிளாட்டுகள் விற்பனை இந்த வீடு விற்பனை திருவிழா, குறைந்த கால அளவு சலுகை வாய்ப்பு. ரியல் எஸ்டேட் மேம்படுத்துவோர், ஏஜென்ட்டுகள், கூடுதல் சலுகைகள் மற்றும் வீடு வாங்க விருப்பம் உள்ளோருக்கு தனித்துவமிக்க சலுகைகள் உள்ளன. வீட்டுமனை மீதான கட்டணம், பத்திரப்பதிவு கட்டணத்தில் சலுகை, இலவச வசதிகள், எளிதாக பணம் செலுத்தும் திட்டம், சொத்து வாங்குவோருக்கும், குடும்பத்தினருக்கும், தேடுவோருக்கும் இது ஒரு மிக அருமையான தருணம்.

இந்த வீடு விற்பனை திருவிழா, மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், புதிய தொடக்கத்தையும் கொடுக்கும். தீபாவளி போன்ற மகிழ்ச்சியை தரும் வீட்டுமனை திருவிழாவோடு கனவு இல்லத்தை தேடி தேர்வு செய்வதோடு, சொத்து மீது முதலீடு செய்யவும் இது ஒரு பொன்னான வாய்ப்பு ஆகும்.கிரடாய் பற்றி:

இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் கூட்டமைப்பு (கிரடாய்), இந்திய ரியல் எஸ்டேடட் தொழிலில் ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டுவருவதை இலக்காக கொண்டு செயல்படும் இந்திய தனியார் ரியல்எஸ்டேட் மேம்பாட்டாளர் அமைப்பின் ஒரு அங்கம். இந்தியா முழுவதிலும் 21 நகரங்களில், 21 மாநிலங்களில் 13000-க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்களை கொண்டுள்ளது. தொடர்ந்து, இந்த தொழிலின் மேம்பாட்டிற்கும் முன்னேற்றத்துக்கும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது.

கிரெடாய், கோவை:

கோயம்புத்தூரில் ஒரே கூரையின் கீழ், அதிக அளவில் 70-க்கும் மேற்பட்ட தனியார் ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது.  ரியல்எஸ்டேட் துறையில் கோவை மண்டலத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்குதாரராகவும், உறுப்பினர்களை அவ்வப்போது வெளியாகும் அரசு கொள்கைகள், விதிமுறை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் எதிராக குரல் கொடுத்து வருகிறது.

-சீனி, போத்தனூர்.

Comments