கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா கலை மற்றும் வீர தீர சாகச நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக நடைபெற்றது!!

இந்திய நாட்டின் 77" வது சுதந்திர தின விழா  நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் தேசிய கொடி வரலாற்றை கூறும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

முன்னதாக விழாவில் பள்ளி வளாகத்தில் ஆஸ்ரம் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் வீரதீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக இந்திய தேசிய கொடி உருவான வரலாற்றை தத்ரூபமாக வரைந்த மாணவர்கள் அணிவகுத்து நின்றனர். தேச பக்த பாடல் ஒலிக்க மாணவ மாணவிகள்  கடந்த 1857, முதல் 1904, 1907, 1908, 1917, 1931 என பல ஆண்டுகளாக உருமாறி இறுதியாக 1947 ஆம் ஆண்டு தேசிய கொடி உருவான விதத்தை தத்ரூபமாக அணிவகுத்து நின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரம்மாண்ட தேசிய கொடி பள்ளி வளாகம் முழுக்க பறக்க விடப்பட்டது. நம் தேசியக் கொடியின் அணிவகுப்பு  தேசியக் கொடியின்  வரலாற்றை  பிரதிபலிக்கச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் இறுதியாக அன்பே சிவம் நண்பர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கப்பட்டது. சுமார் இரண்டாயிரம் கிலோ அளவில் வழங்கப்பட்ட இந்த அரிசி மாணவ மாணவிகள் தாங்களாகவே சேகரித்து வழங்கி உள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிகழ்ச்சியில் ஆஸ்ரம் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன், அறங்காவலர் கவுரி மற்றும் நிர்வாகி கவுரி உதயேந்தி்ன், வித்யாஸ்ரமம் பள்ளி செயலர் சௌந்தர்யா, ஆஸ்ரம் பள்ளி முதல்வர் சரண்யா உட்பட பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments