கோவையை சோலையாக்கும் முயற்சியாக ருதம்பரா பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற விதைப்பந்து திருவிழா!!

இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்தும் விதமாகவும், பூமி வெப்பமயமாதலை தடுக்க  மரங்களின் அவசியங்களை உணர்ந்து மரங்களை  அதிகமாக்கும் நோக்கத்தில் கோவை  ருதம்பரா பவுண்டேஷன் மற்றும் ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னால் மாணவர்கள் சங்கத்தினர் இணைந்து  பிரம்மாண்ட விதைப்பந்து திருவிழா நடைபெற்றது.

ஒண்டிப்புதூர் அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், ருதம்பரா பவுண்டேஷன் நிறுவனர் இயக்குனர் சித்த ஸ்ரீ ஈசன் குருஜி ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ், நொய்யல் பெருவிழா ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதானந்தா, என் ஜி ஆர் நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவன், ஆத்மா அறக்கட்டளை நிறுவனர் கந்தவேல், மற்றும் நந்தகோபால், சிஐடி கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைப்பாளர் திவ்யா மோகன ராஜீவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சித்த ஸ்ரீ ஈசன் ஜி, மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து இந்த விதைப்பந்து திருவிழாவை நடத்தி வருவதாகவும் பல்வேறு வகையான மூலிகைகள் கலந்த மண்ணுடன் நாட்டு விதைகளை கலந்து தயாரிக்கப்படும் விதைப்பந்துகள் கோவையை சோலையாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும், கோவையை சுற்றி உள்ள வனப்பகுதியிலும், குளம், குட்டைகளிலும் விதைப்பந்து  வீசப்பட இருப்பதாக தெரிவித்தார். ஒரு நாளில் நடைபெற்ற இந்த விதைப்பந்து திருவிழாவில் ஏழரை இலட்சம் விதைப்பந்துகள் தயார் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments