வாழ்க்கையின் புதிய மாற்றத்திற்குரிய விருது எனும் பெயரில் கோவை கே.ஜி.ஐ.எஸ்.எல் மைக்ரோ கல்லூரியில் சாதனை விழா நடைபெற்றது!!

-MMH

கோவை சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் கே.ஜி.ஐ.எஸ்.எல் மைக்ரோ கல்லூரியில் பயின்ற மாணவ,மாணவிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நல்ல வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர்..இந்நிலையில் இந்த கல்லூரியின்  சாதனைகளைக் கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இதில் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர்  அசோக் பக்தவத்சலம் தலைமை தாங்கினார்.

வாழ்க்கையின் புதிய மாற்றத்திற்குரிய விருது எனும் பெயரில் நடைபெற்ற இதில்,முன்னதாக சிலை திறப்பு விழா நடைபெற்றது.தொடர்ந்து, மைக்ரோ கல்லூரி முதன் முறையாக இந்தியாவின் பல முக்கிய நகரங்களான சேலம், மதுரை, பாண்டிச்சேரி, திருச்சி, பாலக்காடு, கொச்சின், திருவனந்தபுரம், மைசூர், மங்களூர், ஹைதராபாத், டெல்லி மற்றும் மும்பை என 13 புதிய   கிளை நிறுவனங்கள் துவங்கப்பட்டது.

தொடர்ந்து,சிறந்த திறன் வாய்ந்த மாணவ,மாணவிகள் வாழ்க்கையின் புதிய மாற்றத்திற்குரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில்,மனித வள மேம்பாட்டுத் துறைத்தலைவர்கள், இயக்குனர்கள், மேலாண்மை இயக்குனர்கள், பல்துறை சார்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகள். கே.ஜி.ஐ.எஸ்.எல் மைக்ரோ கல்லூரியின் மூத்த உயர் அதிகாரிகள், வெற்றி பெற்ற மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள். 

பேராசிரியர்கள். உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments