சுழல் மிகுந்த பகுதிகளில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள் ஆனால் இவர்களில் சிலர் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் கொடுத்துள்ள அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் ஆகியவற்றை கடைபிடிப்பதே இல்லை மேலும் நீர் நிலைகளில் சென்று குளிப்பது தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சோலையார் அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் குளிப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது உள்ளது. சோலையார் அணைப்பகுதியில் சுழல் அதிகம் உள்ள இடங்களை அறிந்து கொள்ளாமல் சுற்றுலா பணிகள் நினைத்த இடங்களில் குளித்து வருகின்றனர்.

சுழல் உள்ள தண்ணீர் பகுதியில் குழந்தைகளுடன் குளிப்பதால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சோலையார் அணையில் 126 அடி தண்ணீர் உள்ளதால் ஆபத்தான பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடை செய்யும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments