தமிழ் சித்தர்கள் வகுத்த யோக கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ஆன்மீக பணியில் ஃபவுண்டேசன் அறக்கட்டளை!!

  

தமிழ் சித்தர்கள் வகுத்த யோக கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ஆன்மீக பணியில் ஈடுபட்டிருக்கும் பரம்பொருள் ஃபவுண்டேசன் அறக்கட்டளை நிறுவனர் குருஜீ மகா விஷ்ணு சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து நாடுகளின் உலக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தாயகம் திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு .

தமிழ் சித்தர்களின் யோக கலையை உலக மக்களுக்கு இட்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருக்கின்ற குருஜி மகாவிஷ்ணு உலக நாடுகள் சுற்று பயணத்தை முடித்துவிட்டு தாயகம் வந்த நிலையில், அவருக்கு மாலை மரியாதையுடன் உற்சாக வரவேற்பு தரப்பட்டன. வயிற்று பசியை நீக்கி பின்பு ஞானப் பசியை போக்குவோம் என்ற தாதக மந்திரத்துடன், குருஜீ மகாவிஷ்ணுவால் பரம்பொருள் ஃபவுண்டெசன் என்ற அறக்கட்டளை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவிநாசி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ் சித்தர்கள் வகுத்து வைத்த அற்புதமான யோகக் கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ஆன்மீக பணியில் பரம்பொருள் பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவன குருஜி மகாவிஷ்ணு ஈடுபட்டிருக்கின்றார். பல ஆன்மீக தகவல்களை உலகம் முழுவதும் உள்ள 90 நாடுகளுக்கு இணையத்தின் வாயிலாக, உலகியல் வாழ்க்கையை உயர்ந்த கட்டத்தில் வாழ்வது குறித்தும், உயர்ந்த கட்ட நிலைகளை அடைவது குறித்தும் போதித்து வருகின்றார். காஞ்சி விஷ்ணு சுவாமிகள் மற்றும் வள்ளளார் போதிக்கின்ற கருத்துகளை உலகம் முழுவதும் இட்டு செல்லும் விதத்திலே இந்த பணியை குருஜி மகாவிஷ்ணு முன்னெடுக்கின்றார்.

இந்த நிலையிலே, தமிழ்நாட்டை கடந்து உலகம் முழுவதும் இந்த வாழ்வியல் தத்துவங்களை கொண்டு செல்லும் விதமாக, பரபொருள் ஃபவுண்டேசன் கிளைகளை மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, துபாய், கம்போடியா போன்ற நாடுகளில் தனது கிளையை விரிவுபடுத்தியிரிக்கின்றது. அடுத்ததாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரம்பொருள் ஃபவுண்டேசன் கிளைகளை விரைவிலே ஆரம்பிக்கின்றனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உலகம் முழுவதும் பரம்பொருள் ஃபவுண்டேசன் ஆன்மீக பணிகளுக்கு பெரும் வரவேற்பு இருப்பதாக குருஜி தெரிவித்திருக்கின். ஞானபுரிதலுடன் வாழ கருணை அன்பை பகிர வேண்டும். அப்போது இந்த சமுதாயம் ஞான சமூதாயமாக மாறிவிடும். கருணை மட்டுமே ஒரே தீர்வென குருஜி மகாவிஷ்ணு தெரிவித்திருக்கின்றார். இந்த அறக்கட்டளையானது ஆன்மீக பணிகள் மட்டுமின்றி, கல்வி செலவு, அண்ண தானம் செய்தல் பணிகளிலும் ஈடுபட்டிருக்கின்றது.

-சீனி, போத்தனூர்.

Comments