அதிமுக சார்பில் வ. உ. சிதம்பரம் பிள்ளை 152வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!!

-MMH

கடந்த அதிமுக ஆட்சியில் வ.உ.சி பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிக்க அனைத்து பணிகளும் நடைபெற்றது வந்தது பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 152-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவச் சிலைக்கு அதிமுக சார்பில்   மரியாதை செலுத்தப்படும்  என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை தனது சொந்த சொத்துக்களை எல்லாம் விற்று சிறை சென்று கடைசி காலத்தில் ஏழ்மையாக வாழ்ந்து மறைந்த தியாகி வ. உ. சிதம்பரம் அவர்களின் பிறந்தநாளை போற்றி வணங்குவதில் பெருமை கொள்கிறோம். 

அதைத் தொடர்ந்து கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,   ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் இணைந்து, இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தது.

ஓட்டப்பிடாரத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்கள் தளவாய்சுந்தரம் அவர்கள், மோகன் அவர்கள் செல்ல பாண்டியன் அவர்கள் சண்முகநாதன் அவர்கள் சின்னதுரை அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்  வ உ சி யின் பிறந்த இல்லத்திற்கு சென்று    கடம்பூர் ராஜூ   அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே அதிக சுதந்திரப் போராட்ட தியாகிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு அதில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வ உ சிதம்பரம் பிள்ளை வீரபாண்டிய கட்டபொம்மன் மாமன்னன் சுந்தரலிங்கம் எட்டையாபுரம் பாரதியார் என புகழ்பெற்ற மாவட்டம் .

 வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், வீரபாண்டி அழகிரி என்ற கோபி ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய காந்தி என்ற காமாட்சி தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டனர்.  

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

ஒட்டப்பிடாரம் நிருபர், 

-முனியசாமி.

Comments