இந்திய கூடைப்பந்து அணியின் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்று, ஸ்ரீலங்காவை வீழ்த்தி கோவை திரும்பிய சேர்ந்த பள்ளி மாணவன் ஆதவனுக்கு உற்சாக வரவேற்பு!!

16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப்பிற்கான  தெற்காசிய தகுதிச் சுற்று கூடைப்பந்து  போட்டிகள் கடந்த  ஆகஸ்ட் 28 ஆம் தேதி, ஸ்ரீலங்காவில் நடைபெற்றது. இதில் ஸ்ரீலங்காவை வீழ்த்திய இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இதில் இந்திய அணி சார்பாக கோவையை சேர்ந்த ஆதவன் என்ற பள்ளி மாணவனும் இடம் பிடித்து விளையாடினார். கோவையிலிருந்து 16 வயதுக்கு உட்பட்ட இந்திய கூடைப்பந்து அணியில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற மாணவன் ஆதவனிற்கு, அவர் பயின்று வரும் காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இதில், பள்ளியின் தலைவர் சுகுணா மாணவன் ஆதவனின் பெற்றோர் குமரேசன், ஜெயமணி ஆகியோர் கலந்து கொண்டனர்..இதில் செய்தியாளர்களிடம் பேசிய மாணவன் ஆதவன், சுகுணா பிப் பள்ளியில் சிறுவயது முதலே பயின்று வருவதாகவும், இரண்டாம் வகுப்பு பயிலும் போதே கூடைப்பந்து விளையாடி வருவதாக கூறிய அவர், கோவை மாவட்ட அணியில் கேப்டனாக இருந்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்திய ஆண்கள் பிரிவு கூடைப்பந்து அணியில் விளையாடுவதே தமது இலட்சியம் என கூறிய அவர், இந்திய கூடைப்பந்து அணியில் சர்வதேச போட்டி மற்றும் ஒலிம்பிக்கில் வெல்லும் அணியில் தான் விளையாடி வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சுகுணா பிப் பள்ளியின் சீனியர் முதல்வர் மார்ட்டின், முதல்வர் பூவணன், அகாடமிக் ஒருங்கிணைப்பாளர் ஷோபா, உடற்கல்வி இயக்குனர் ஆல்வின் பிரான்சிஸ் உட்பட ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments