பாஜக சார்பில் மாவீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் 224 வது நினைவு தினம் அனுசரிப்பு!!!!

-MMH

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கிராமத்தில் சுதந்திரப் போராட்ட மாவீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் 224 வது நினைவு தினத்தை முன்னிட்டு கருங்குளம் வடக்கு ஒன்றியம் வல்லநாடு கிராமத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவருடைய திருஉருவ சிலைக்கு மாவட்ட தலைவர் திரு வெங்கடேசன் சென்னகேசவன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

வெள்ளையத் தேவன் நிகரற்ற வீரன்.ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கு. -வதில் மகாசூரன். போர்களம் என்றால் அவருக்குக் கொள் ளை பிரியம். வீரபாண்டிய கட்டபொம்மு மகாராஜாவின் வலது கரம். வெள்ளையர் கள் வீரப்பாண்டியரிடம் கப்பம் கேட்டு வந்த போது முதலில் சீறிப் பாய்ந்தது வெள்ளை யத்தேவன் தான்.

அடங்காத காளை ஒன்றை வெள்ளையம்மாள் என்ற பெண் வைத்திரு. ந்தாள். காளையை அடக்குபவர்களுக்கு. த்தான் நான் மாலையிடுவேன் என்று வீரசபதம் செய்திருந்தாள். ஆனால் காளை மயை யாரும் அடக்க முடியவில்லை. அதை அறிந்த வெள்ளையைத் தேவன் அக்காளையை அடக்கி சாயல்குடியைச் சேர்ந்த இராமையா தேவரின் மகள் வெள்ளையம் மாளை மணந்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணம் செய்வித்து மகிழ்ந்தனர். ஒட்டப்பிடாரம் வழிதனிலே, ஓடி வருதாம் பேயக்குதிரை...” என்று அந்தக் குதிரையின் வீரத்தைப் பேசாதவர்களே இல்லையாம்.

1799செப்டம்பர் 1-ஆம் தேதி. திருச்செந்தூரில் நடந்த ஆவணி மாதத் திருவிழாவிற்கு கட்டபொம்மனும் ஊமைத்துரையும் சென்ற சமயம். ஒற்றர்கள் மூலம் இதை அறிந்த கர்னல் பானர்மேன், பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டனர்.

பரங்கியர் படையோ பெரும்படை பீரங்கிகள், துப்பாக்கிப் படைகள், குதிரைப் படைகள் என்று ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து குவித்திருந்தான் ஆங்கிலேயன். பாஞ்சாலங்குறிச்சியில் இருந்ததோ மரபு ரீதியான ஆயுதம் தாங்கிய ஆயிரம் வீரர்கள்.என்றாலும் அஞ்சவில்லை தமிழ்ச்சிங்கங்கள்.

காரணம் அதற்குத் தலைமை தாங்கியது தலைமைத் தளபதி வெள்ளையத் தேவன். எதிரிகள் படையை அவன் தாக்கியதைக் கண்டு பரங்கியர் பயந்துபின்வாங்கினார்கள். பீரங்கிக்குண்டுகளிடமிருந்து கோட்டையைக் காக்க வெள்ளையத்தேவன் பட்ட பாட்டை எழுத்தில் எழுதமுடியாதாம். நூற்றுக்கணக்கான துப்பாக்கி வீரர்கள் அவன் மார்பை குறிவைத்தார்கள்.

ஆனால், எதிரிகளின் குண்டுகள் அவன் மார்பில் பாய்ந்தபோதும் விடாமல் தொடர்ந்து எதிரிகளை அவன் வாளுக்கு இரையாக்கிக்கொண்டே வந்தான்.

செய்தி கேள்விப்பட்டு கட்டபொம்மனும் ஊமைத்துரையும் திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி வந்ததை அறிந்தான். அதுவரை மார்பிலே குண்டுகளைத் தாங்கி, குத்தப்பட்ட வேலையும் பொருட்படுத்தாது பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் பத்திரமாக ஒப்படைத்தான். அடுத்தநொடி அந்தப் போர்க்களத்திலேயே வீரமரணம் எய்தினான் வெள்ளையத்தேவன்.

துப்பாக்கிக் குண்டுகளை முத்தமிட்டபோதும் இறுதிவரை மானத்தை இழக்காமல் மரணம் தொட்ட மாவீரன் வெள்ளையத்தேவன். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பிரபு ஒன்றிய தலைவர் நங்கமுத்து விவசாய அணி மாவட்ட செயலாளர் பேச்சி மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் முருகன் பிற மொழி பிரிவு மாவட்டச் செயலாளர் தம்பான் ஊடகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் OBC மணி மாவட்ட செயலாளர் சுடலைமுத்து ஒன்றிய பொருளாளர் பால்துரை ஒன்றிய துணைத் தலைவர் சுந்தர்ராஜ் ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு ஒன்றிய துணை தலைவர் தம்பான் கிளைத் தலைவர் மீனாட்சி கப்பல் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

ஒட்டப்பிடாரம் நிருபர், 

-முனியசாமி.

Comments