ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர்4 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா (48 பந்துகளில் 53 ரன்கள்) அரைசதமடித்த நிலையில், மேலும் கேஎல் ராகுல் 39 ரன்களும், இஷான் கிஷன் 33ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் துனித் வெல்லலகே 5 விக்கெட் எடுத்து அசத்தினார். மேலும் அசலங்கா 4 விக்கெட்டுகளும், தீக்ஷனா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணி 41.3 ஓவர்களில் வெறும் 172 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை அணி பேட்டிங்கில்  அதிகபட்சமாக துனித் வெல்லலகே 42* ரன்களும், தனஞ்செய டி சில்வா 41 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும்   மேலும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஹர்திக் பாண்டியா 1 விக்கெட் வீழ்த்தினார். சூப்பர்4 சுற்றில் 2-வது வெற்றியை ருசித்த இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments