கோவில்பட்டியில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில்

பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு. கடம்பூர்.செ.ராஜு .𝐃𝐓𝐞𝐝.,𝐌𝐋𝐀., அவர்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அண்ணாவின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அதிமுக கொடியில் அவரது உருவப்படம் பொறிக்கப்பட்டது மற்றும் அவரது பெயரில் கட்சியின் பெயரும் பதிவு செய்யப்பட்டு பெருமைப்படுத்தப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பேரறிஞர் அண்ணா வரலாறு:

ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படைகள் அரசின் விதிகளுக்குட்பட்டு, சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1969 ஜனவரி 14 தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments