குப்பை மேடாகி வரும் சுற்றுலா தளம் பொது மக்களின் கவனம் எங்கே அரசின் முடிவு என்ன??

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியில் சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தைக் கோரி பலமுறை தனியார் வாகனங்கள் சார்பில் தங்களுடைய தேவையை தெரிவித்துள்ளனர். 

அதை ஏற்றுக் கொண்ட மூணார் பஞ்சாயத்து மூணார் கால்பந்து மைதானத்தில் எதிரே தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டண கழிப்பிட வசதியுடன் செய்து கொடுத்தது. ஆனாலும் தனியார் வாகனங்கள் அங்கே வந்து வாகனங்களை நிறுத்தும் பொழுது பிளாஸ்டிக் மற்றும் உணவு வேஸ்ட் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அங்கேயே விட்டு சென்று விடுகின்றனர்.

இதனால், அப்பகுதியானது மாசுபாடு அடைந்துள்ளது எனவே வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிற அந்த இடத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளவும் மற்றும் அரசு எந்த விதமான தடை நடவடிக்கை எடுக்காத விதம் நடந்து கொள்ளவும் சுற்றுலாத் துறை சார்பில் இருந்து கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments